" உறவுகளை தேடி அலைந்துகொண்டிருக்கையில் ஜனாதிபதி சர்வதேசத்திடம் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது"

Published By: Daya

04 Oct, 2018 | 11:40 AM
image

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஏக்கங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் கண்ணீருடனும் தங்களுடைய தகப்பன், சகோதரர்கள் என உறவுகளை தேடி அலைந்து கொண்டிருக் கையில் ஜனாதிபதியின் கூற்று ஏற்கக்கூடியதாக இல்லை. அவர் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக செயற்படுகிறார்.

ஆகவே இலங்கைத் தமிழரின் நிலை உணரப்பட்டு சர்வதேசத்தின் நேரடியான விஜயம், அழுத்தம், நேரடிக் கண்காணிப்பின் ஊடாக தமிழ் மக்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி வழங்க வேண்டும் என வலியுறுத்துவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் தலைவி அமலநாயகி அமலராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி சர்வதேசம் சென்று எமது நாட்டுப் பிரச்சினையை உள்ளக பொறிமுறையின் ஊடாகவே தீர்த்துக் கொள்வோம் சர்வதேசம் வந்து தலையிட தேவையில்லை என கூறியிருக்கின்றார். 

ஜனாதிபதிக்கு சர்வதேசம் கொடுத்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இது வரைக்கும் எந்தவொரு தீர்வையும் அவர் வழங்க வில்லை. எந்தவொரு முடிவுக்கும் அவர் வரவில்லை.

எங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் அவர் இவ்வாறு கூறி குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாக செயற்படுகிறார்.சர்வதேசத்தின் நேரடியான விஜயம், அழுத்தம் மற்றும் நேரடிக் கண்காணிப்பின் ஊடாக தமிழ் மக்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஏக்கங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் கண்ணீருடனும் தங்களுடைய தகப்பன், சகோதரர்கள் என உறவுகளை தேடி அலைந்துகொண்டிருக் கையில் ஜனாதிபதியின் கூற்று ஏற்கக்கூடியதாக இல்லை.தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.  இதற்காக ஐக்கிய நாடுகள் சபை அழுத்தத்தினைக் கொடுக்க வேண்டும். எமது உரிமைகள் இன்னும் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் எங்களுடைய பிரச்சினைகள் எங்களை அறியாமலேயே போய்க் கொண்டிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38