பூமியின் சாம்பியனானார் மோடி

Published By: Digital Desk 4

03 Oct, 2018 | 10:08 PM
image

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு பூமியின் சாம்பியன் எனும் விருதை ஐ.நா பொதுச்செயலாளர் இன்று வழங்கி வைத்தார். 

சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுவர்களை ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஒப் த எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்த ஆண்டு  உலகின் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐ.நா.சபை தேர்வு செய்து உள்ளது. 

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பது என்று உறுதி ஏற்று செயற்பட்டு வருவதற்காகவும் குறித்த விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கலந்துகொண்டு மோடிக்கு ‘சாம்பியன்ஸ் ஒப் த எர்த்’ என்ற விருதினை வழங்கி கவுரவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right