திலீபன் நினைவுகூரப்பட்டதால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தில்லை - வடமாகாண ஆளுநர்

Published By: Rajeeban

03 Oct, 2018 | 10:51 AM
image

விடுதலைப்புலிகள் அமைப்பின் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என தெரிவிக்கப்படுவதை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரோ நிராகரித்துள்ளார்

ஐலன்டிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே ரெஜினோல்ட் குரே இதனை தெரிவித்துள்ளார்.

தீலிபனின் நோக்கம் என்னவாகயிருந்தாலும் அவர் விடுதலைப்புலிகள் சார்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் திலீபனை நினைவுகூறுவதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு புத்துயுர் அளிக்க முடியாது  எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னரும் அரசாங்கம் இன்னமும் வடபகுதி மக்களின் மனங்களை வெல்லவில்லை என தெரிவித்துள்ள ஆளுநர் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் வடபகுதி மக்களை தோற்கடிக்கப்பட்டவர்களாக கருத கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் மீண்டும் நம்பிக்கையை பெறுவதற்காக சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ள குரே சாதாரண மக்களின் அபிலாசைகளை அரசியல் நோக்கங்களுடன் இணைத்து பார்க்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜேவிபியும் பொதுக்கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முன்னர் சரத்பொன்சேகாவிற்கும் சிறிசேனவிற்கும் இவர்கள் ஆதரவளித்திருந்தனர் என தெரிவித்துள்ள ஆளுநர் இதன் காரணமாக அவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47