ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவம் தேவையில்லை- சட்டமொழுங்கு அமைச்சர்

Published By: Rajeeban

02 Oct, 2018 | 10:09 PM
image

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளைஞர் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தவும் படையினரை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஆராயவுள்ளதாகவும் சட்டமொழுங்கு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47