பொருளாதார வீழ்ச்சி குறித்து கோத்தாவின் கருத்து வேடிக்கையானது - ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: R. Kalaichelvan

02 Oct, 2018 | 04:31 PM
image

(நா.தினுஷா) 

அரசியல் பழிவாங்கல்களே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமானநிலையம் போன்றவற்றை கடந்த அரசாங்கத்தின் மீதான வைராக்கியத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடக்கினார் என குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சட்ட ஒழுங்கு அமைச்சர் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

வெறுமனே கடன்களை தங்கிய அபிவிருத்தியை நோக்கி தேசிய அரசாங்கம் செல்லவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்றவை நாட்டுக்கு எந்தவித வருமானத்தையும் பெற்றுத் தரவில்லை. 

மாறாக கடனில் நிலைகொண்டுள்ள நிறுவனங்களாகவே அவை இரண்டும் காணபடுகின்றன. நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வருமானமற்ற வெறுமனே கடன்களில் தங்கிய அபவிருத்தியை நோக்கி தேசிய அரசாங்கம் செல்லவில்லை.  

குற்றங்கள் வெளிவரும்போது அரசாங்கத்தின் மீது குறை கூறுவது இயல்பான விடயமே என அவர் மேலும் தெரிவித்தார்.அம்பந்தோட்டை துறைமுகம்,பொருளாதார வீழ்ச்சி,ரஞ்சித் மத்தும பண்டார,கோதபாய ராஜபக்ஷ 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08