சிறந்த சுகாதார பழக்கங்களை மேம்படுத்தும் கிறிஸ்ப்றோ சுவ சக்தி திட்டங்கள் அறிமுகம்

Published By: R. Kalaichelvan

02 Oct, 2018 | 03:19 PM
image

ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதார பழக்கங்களை தமது ஊழியர்கள் குழாம் மத்தியில் மேம்படுத்துவதற்காக “சுவ சக்தி” செயற்திட்டம் கிறிஸ்ப்றோ குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 17 இடங்களிலுள்ள கிறிஸ்ப்றோ வியாபார இடங்களிலுள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனக்காக இத்திட்டம் செயற்படுத்தப்படும். 

இதற்காக குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் சுகாதார அலுவலகத்தின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

“சுவ சக்தி” சமூக நலன்புரி மற்றும் ஊழியர் நலன்புரி செயற்திட்டத்தின் கீழ் ஆரம்ப மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக, அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். 

இந்த செயற்திட்டங்களில் சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிய முறையில் அறிவுறுத்தப்படும் விரிவுரைகள் வழங்கப்படும்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்கள் கிறிஸ்ப்றோ குழுமத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாதங்களாக அறிவிக்கப்பட்டது.

அதன் தொனிப்பொருளுக்கு அமைய இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய கண் பரிசோதனை செய்தல்ரூபவ் இரத்த பரிசோதனை, சிறு நீரக பரிசோதனை,மகளிர் நோய் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெற்றன.

மேலும் இந்த “சுவசக்தி” செயற்திட்டத்தின் கீழ் கிராமிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை மீள் புனரமைப்பு

செய்தல்ரூபவ் மகப்பேற்று மற்றும் சிறுவர் சிகிச்சைகள் போன்ற செயற்திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளரான கிறிஸ்ப்றோ குழும வியாபாரத்தின் மனித வள மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி கருத்து தெரிவிக்கையில்,“சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் ஊடாக ஊழியர்களது உற்பத்தி செயற்திறன் அதிகரிக்கும். அவர்களது குடும்ப உறுப்பினர்களது சுகாதார பழக்கங்கள் மேம்படுவதால் அதுவும் ஊழியர்களது செயற்திறன் அதிகரிக்க காரணமாக அமையும். இதன்மூலம் சமூகத்திற்கே நன்மை”என குறிப்பிட்டார்.

நிறுவன சமூக கூட்டாண்மை பொறுப்பு மற்றும் ஊழியர்களுக்கான நலன்புரி செயற்திட்டங்களை பல்வேறு எண்ணங்கள் ஊடாக கிறிஸ்ப்றோ நிறுவனம் முன்னெடுக்கின்றது. “சிசு திரிய” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ நிறுவன ஊழியர்களது பிள்ளைகள் மற்றும் மாணவ சமூகத்தவரின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துகின்றது.

கிறிஸ்ப்றோ நிறுவன குடுமத்துடன் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாய சமூகத்தவரின் வாழ்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்கள் “திரி சவிய” ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

“பிரஜா அருண” செயற்திட்டத்தின் கீழ் கிறிஸ்ப்றோ ஊழியர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் கிராமிய சமூகத்தவரின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியுதவிகளை செய்கின்றது.“Crysbro Next Champ”செயற்திட்டம் ஊடாக எதிர்கால உலகை வெல்லக்கூடிய எமது நாட்டின் திறமையான இளம் விளையாட்டு வீர வீராங்கனைளை அறிமுகப்பபடுத்தல் இடம்பெறுகின்றது.

இற்றைக்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்ப்றோ நிறுவனத்தில் இன்று 1,100 இற்கு

மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 6 நிறுவனங்களை கொண்ட ஒரு பாரிய குழுமமாக உள்ளது. 

நாடு முழுவதும் 17 இடங்களில் தமது உற்பத்திளை மேற்கொள்ளும் இலங்கையின் பெரிய கோழி உற்பத்தி குழுமம்

கிறிஸ்ப்றோ வர்த்த நாமத்தின் கீழ் 39 வகையான உற்பத்திகள் சந்தையில் உள்ளன. உலகின் உயர்தர தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முழுமையான உற்பத்தி செயற்பாடுகளை கணினி மயப்படுத்தி உயர்தரம்,புத்துணர்வு,போஷாக்கு மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தியே தமது உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04