விமான நிலையத்தில் மாயமான தமிழ்ப்பெண்ணின் நிலை என்ன?: இரு பிள்ளைகளுடன் தவிக்கும் கணவர்

Published By: J.G.Stephan

02 Oct, 2018 | 11:59 AM
image

வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட 2 பிள்ளைகளின் தாயாகிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவர் கடந்த 13-09-2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மாயமாகியுள்ளார்.

கட்டார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13-09-2018 அன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலைபேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்து இருந்த நிலையில் கடந்த 13-09-2018  கணவன் ஆவலுடன்,  விமான நிலையத்திற்கு சென்று காத்து இருந்துள்ளார்.

கிட்ட தட்ட 3,4 மணித்தியலயம் காத்திருந்தும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பதில் வர கணவன் மனைவி வரவில்லை என்று எண்ணி வீடு திரும்பி உள்ளார்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமை யின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட்டிற்க்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13-09-2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்து சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக கூறினார்கள்..

பின் கணவருக்கு விமான சீட்டின் பிரதியும் அனுப்பி வைத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் கணவனும் இரண்டு பிள்ளைகளும் அழுது புலம்பி தவித்து போனார்கள்.

உடனடியாக கணவன் அருகில் உள்ள பொலிஸ் நிலையமான வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி கணவரை விமான நிலைய போலிஸ் நிலையத்தில் சென்று. புகார் அளிக்குமாறு கூறினர்.

கணவன் மீண்டும் 15-09-2018 அன்று கொழும்பு விமான நிலைய போலிஸ் நிலையத்தில் சென்று தன் மனைவி தொடர்பாக நடந்த சம்பவத்தை தெரிவித்த போது அவர்கள் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கமராவில் பரிசோதித்த போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத்தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிய வந்தது.

பின்பு வாழைச்சேனை போலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார் கணவர். இதனைத் தொடர்ந்து கணவன் கொழும்பு முழுவது சுற்றித்திரிந்து வீடு வந்து சேர்ந்தார்.

அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனைவியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை.

எனவே இப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி தங்களுக்கு எதும் தகவல் அறிய வரும் பட்சத்தில் அருகில் உள்ள போலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு உங்களை அன்பாக வேண்டி நிற்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்.. (0762940741 தொடர்பு கொள்ளவும்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58