19 வருடங்களிற்கு முன்னர் தென்கொரியாவில் இடம்பெற்ற குற்றம் குறித்து சிஐடி விசாரணை ஆரம்பம்

Published By: Rajeeban

01 Oct, 2018 | 10:31 PM
image

19 வருடங்களிற்கு முன்னர் தென்கொரியாவில் பெண்ணொருவர் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் எல்லைக்கு வெளியே சிஐடியினர் மேற்கொள்ளும் முதலாவது விசாரணையிதுவென  பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

1998 இ;ல் வீதிவிபத்தொன்றில் தென்கொரிய பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.

எனினும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது அந்த பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டமை தெரியவந்தது.

குறிப்பிட்ட பெண்ணி;ன் ஆடைகள் மூலம் அதிகாரிகள் மரபணு மாதிரிகளை பெற்றிருந்தனர்.

இதன் பின்னர் 2010 இல் சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாக இலங்கை பிரஜையொருவர் தென்கொரியாவில் குற்றம்சாட்டப்பட்டார்.

அவருடைய மரபணு மாதிரிகளை ஆராய்ந்தவேளை அது 1998 இல் விபத்தில் இறந்த பெண்ணின் ஆடையில் காணப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவது தெரியவந்தது.

இதன் பின்னர் தென்கொரிய விடுத்த அழைப்பை ஏற்று அந்த நாட்டிற்கு சென்ற சிஐடியினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் இந்த வருடம் இலங்கை வந்திருந்த கொரிய அதிகாரிகள் குழுவொன்று 1998 சம்பவம் குறித்து ஆராய்ந்தது.

இது குறித்த விபரங்களை சிஐடியினர் நீதிமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளனர்

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56