சிறுவர் தொழிலாளர்களின்  எண்ணிக்கை இலங்கையில் மிகக் குறைவு - சந்ராணி பண்டார 

Published By: Vishnu

01 Oct, 2018 | 06:41 PM
image

(நா.தினுஷா) 

உலக நாடுகளில் 5 வயது முதல் 11 வயது வரையான சிறுவர்கள் விவசாயத்தில் 82 வீதமானவர்களும், 4.4 வீதமான சிறுவர்கள் கைத்தொழில்களில் ஈடுப்படுபவர்களாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கட்டுபாட்டுக்குள் காணப்படுவதாக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டார தெரிவித்தார். 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 'தைரியமாக முன்னோக்கி செல்வதற்காக - எமது சிறுவர்களை பலப்படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் அலரிமளிகையில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டதோடு சிறுவர் தின விசேட முத்திரையும் வெளியிடப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் படி 5 வயது முதல் 11 வயது வரையான சிறுவர்கள் விவசாயத்தில் 82 வீதமானவர்களும், 4.4 வீதமான சிறுவர்கள் கைத்தொழில்களில் ஈடுப்படுபவர்களாகவும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும்  12 தொடக்கம் 14 வயது வரையான சிறுவர்களில் 69 வீதமானவர்கள் விவசாயதொழிலும் 12 வீதமானவர்கள் கைத்தொழில்களிலும் ஈடுப்படுபவர்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படுள்ளதென்பது மகிழ்வளிக்கின்றது. 

மேலும் சிறுவர்களின் எதிர்காலம் வயதுவந்தவர்களின் வழிநடத்தல்களில் தங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவது தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. 

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் பாரிய வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதனூடாக சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை சீர்செய்வதற்கான தேவைபாடும் எழுந்துள்ளது. அடுத்த வருடத்தில் இது தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30