ஆடையில் தீப்பிடித்ததில் வயோதிபப் பெண் பரிதாபமாக பலி 

Published By: Vishnu

01 Oct, 2018 | 05:44 PM
image

(இரோஷா வேலு) 

வெலிமடை பாதினாவெல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சமையலறையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரின் ஆடையில் தீப்பற்றியதில் குறித்த பெண் பரிதாபகரமான முறையில் பலியாகியுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச் சம்பவத்தில் வெலிமடை பாதினாவெல மொரகஸ்பள்ளிய பிரதேசத்தில் வசித்து வந்த 62 வயதுடைய வர்சா மொஹமட் ஹபீ முனீசா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 

இவர் நேற்று 30 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தனது வீட்டில் சமையலறையில் தேநீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரது ஆடையில் தீப்பற்றிக் கொண்டதினால் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

தீப்பற்றலை தொடர்ந்து அவர் சத்தம் எழுப்பவே காயங்களுக்குள்ளாகியவரை வீட்டினர் அம்பியூலன்ஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த நபர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே அம்பியூலன்ஸில் மரணித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த நபரது சடலமானது வெலிமடை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு நேற்றைய தினம் வெலிமடை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஹேமா அமரகோன் முன்னிலையில் மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நேற்று மாலை வரையில் வைத்தியசாலையில்  வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் சம்பவத்தின் போது வீட்டில் மரணித்தவரின் கணவரும், மருமகளுமே காணப்பட்டதாகவும் அவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தே குறித்த நபரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மரணித்தவரின் ஆடையில் திடீரென தீப்பற்றிக்கொண்டமையே மரணத்திற்கு காரணமாகவிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கும் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35