உல­கி­லேயே மிகவும் மெல்­லிய புகைப்­ப­டக்­க­ருவி வில்­லையை அவுஸ்­தி­ரே­லிய விஞ்­ஞா­னிகள் உரு­வாக்கி சாதனை படைத்­துள்­ளனர்.

அவுஸ்­தி­ரே­லிய தேசிய பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்சி பாட­சா­லையைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் 6.3 நனோ மீற்றர் பரு­ம­னு­டைய இந்த புகைப்­ப­டக்­க­ருவி வில்லை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பருமன் மனித கேச­மொன்றின் பரு­ம­னுடன் ஒப்­பி­டு­கையில் 2000 இல் ஒரு மடங்கு அள­வு­டை­ய­தாகும்.

இந்தப் புகைப்­படக் கருவி வில்­லையின் கண்­டு­பி­டிப்­பா­னது எதிர்­கா­லத்தில் வங்கிக் கடன் அட்டை அள­வான பரு­ம­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சிகள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மின்­னேற்­ற­மு­டைய கற்­றையைப் பயன்­ப­டுத்தி மொலி­ப்­டெனம் டீசல்பைற் பளிங்­கி­லி­ருந்து அணு­அ­ணு­வாக பட­லங்­களை அகற்றி இந்த வில்லை உருவாக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்விற்கு தலைமை தாங்கிய கலாநிதி லு தெரிவித்தார்.