15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 18 வயது இளைஞன் கைது

Published By: Digital Desk 4

01 Oct, 2018 | 02:49 PM
image

15 வயது மாணவி ஒருவருடன் 18 வயது இளைஞர் குடும்பம் நடத்துகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தம்புள்ள நகருக்கு அண்மித்த கிராமமொன்றில் இருவரும் தமது பெற்றோருக்குத் தெரியாமல் வேறு ஒரு இடத்தில் குடும்பம் நடத்தியுள்ளனர். 

இந்நிலையில், சில மாதங்களாக இருவரும் குடும்பம் நடத்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. 

இதில் 15 வயது சிறுமி ஒரு பாடசாலை மாணவியாவார். தமது பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்புத் தெரிவித்த நிலையில், ஏனையோரின் உதவியுடன் இவர்கள் தனி ஒரு இடத்தில் ஒரு அறையில் தங்கி இருக்கும் போது பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டுள்ளார். 

சந்தேக நபராக இளைஞன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனதுடன் மேலதிக விசாரணைகள இடம்பெற்று வருகின்றன.

இதனுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கும் இன்னும் சிலரைப் பொலிசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளளனர். 

சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33