தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக த.தே.கூ. அறிவிப்பு

Published By: Vishnu

01 Oct, 2018 | 02:46 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக திட்டமிட்ட வகையில் தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படுவது குறித்து வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் ஆதாரங்களை சமர்பித்து ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எதிர்வரும் 03 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது ஜனாதிபதி தலைமையில்  இடம்பெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாகவும் பேசவுள்ளோம். இதேவேளை இங்கு மற்றுமொரு முக்கிய விடயம் தொடர்பாகவும் பேசவுள்ளோம்.

அதாவது முல்லைதீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம். முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28