காணாமல்போனோரின் பிள்ளைகளின் ஏக்கங்களை தீர்க்க சர்வதேசம் உதவ வேண்டுமெனக்கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

01 Oct, 2018 | 02:31 PM
image

தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் காணாமல்போனவர்களின் பிள்ளைகள் பல்வேறு ஏக்கங்களுடன் காணப்படுவதாகவும் அவற்றினை புரிந்துகொண்டு சர்வதேசம் உதவவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த கவனயீர்ப்பு பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் வட கிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு சின்ன வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து பல்வேறு கோரிக்கைகளை தாங்கியதாக பேரணி காந்திபூங்காவரையில் சென்றது. காந்திபூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் தமது தந்தையினரை தங்களிடம் ஒப்படைக்க இந்த சிறுவர் தினத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறுவர்களும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தாம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்திவரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லையெனவும் தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடுசெய்வதன் மூலமே பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது பிள்ளைகள் வாழ்ந்துவருவதாகவும் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுவருவதாகவும் எவ்வாறாயினும் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27