இரு வருடங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட மனைவி உயிருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

Published By: Robert

14 Mar, 2016 | 09:22 AM
image

இரு வருடங்களுக்கு முன்னர் தன்னால் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது அன்புக்குரிய மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் உயிருடன் கலந்து கொண்டதைக் கண்டு கணவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது.

அஸிலால் பிராந்தியத்தைச் சேர்ந்த அபிராஹ் மொஹமட் என்ற மேற்படி நபரின் மனைவி 2014 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், அவரின் உயிரைக் காப் பாற்ற தம்மால் முடியவில்லை என அபிராஹ் மொஹமட்டிற்கு அறிவித்தனர்.

இதன்போது அவர் தனது மனைவியின் சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக அவர் உயிரிழக்கும் முன் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக ளுக்கான கட்டணங்களைச் செலுத்த பணிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் கட்டணங்களைச் செலுத்தி தனது மனைவியின் சடலத்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு வழங்கப்பட்ட சடலம் மத பாரம்பரிய வழக்கப்படி துணியால் சுற்றப்பட்டிருந்ததால் சடலத்தின் முகத்தை அவரால் பார்க்க முடியாதிருந்தது.

தொடர்ந்து அபிராஹ் மொஹமட் உரிய முறைப்படி தனது மனைவிக்கு மரணச்சடங்கை நடத்தி அவரது உடலை நல்லடக்கம் செய்தார். சிறிது காலத்தில் அவர் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தார்.

இந்நிலையில் காணாமல் போனவர்களை அவர்களது பிரிந்த உறவுகளுடன் இணைத்து வைப்பதை நோக்காகக் கொண்டு ஒளிபரப்பப்பட்ட அல் மொக்தாபோன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது மனைவி கலந்து கொண்டிருப்பதை அவதானித்து அபிராஹ் மொஹமட் இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்.

அந்த நிகழ்ச்சியில் தனது கணவரது பெயர் மற்றும் முன்னைய விலாசம் என்பவற்றைக் குறிப்பிட்டு அவரைத் தான் தேடிக் கொண்டிருப்பதாக அந்த மனைவி தெரிவித்தார்.

அவர் விபத்தின் விளைவாக நீண்ட காலம் நினைவாற்றலை இழந்து இருந்ததன் காரணமாகவே தனது கணவரை தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந் ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபிராஹ் மொஹமட்டிற்கு அவரது மனைவி என குறிப்பிட்டு வேறொருவரின் சடலத்தை வழங்கியிருந்த குறிப்பிட்ட மருத்துவமனையின் செயற்பாடு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right