சூதாட்ட நிலையத்தில் கைகலப்பு ; ஒருவர் பலி, சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 4

01 Oct, 2018 | 01:42 PM
image

(இரோஷா வேலு) 

குதிரை பந்தய சூதாட்ட நிலையத்திற்குள் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் சீதுவை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

இச் சம்பவத்தின் போது புனித செபஸ்தியார் மாவத்தை கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய விராஜ் ரொஹான் சில்வா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். 

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் அமைந்துள்ள குதிரை பந்தய சூதாட்ட நிலையமொன்றுக்குள் நேற்று  இரவு 8.45 மணியளவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இவ்வாறு குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரது சடலமானது நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத மற்றும் மரண பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இச்சம்பவத்தின் போது தாக்குதல்தாரியான 30 வயதுடைய போலவலான, நீர்கொழும்பைச்  சேர்ந்த ஆணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாகியதே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார். 

எனினும் குறித்த நபர் தாக்குதலின் போது கீழே விழுந்து தலையில் அடிப்பட்டுள்ளதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இச் சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்று   நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன் ஆஜர்படுத்த உள்ள சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37