அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம்

Published By: Vishnu

01 Oct, 2018 | 04:26 PM
image

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வவுனியாவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பன்டாரவன்னியனின் சிலைக்கருகில் இடம்பெற்றுவரும் இச் சத்தியாக்கிரக போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சத்தியாக்கிரக போராட்டமானது அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதுலை செய் என்ற கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின்  ஊடகப்பேச்சாளர் துளசி, தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் மற்றும் அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள், வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன், உப தலைவர் சு. குமாரசாமி மற்றும் உறுப்பினர்கள், மாக்ஸிஸ லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்கள், சிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14