உள்­நாட்டுப் போர் இடம்பெற்றுவரும் சிரி­யா­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து வந்த சுமார் 14,000 பேர் கிரேக்­கத்தின் மசி­டோ­னிய எல்லைப் பிராந்­தி­யத்­தி­லுள்ள இடோ­மெனி பிராந்­தி­யத்தில் குடிக்க சுத்­த­மான நீரும் உண்ண போதிய உணவும் அற்ற மிகவும் மோச­மான நிலை­மை­களின் கீழ் முகா­மிட்­டுள்­ளனர்.

மசி­டோ­னியா குடி­யேற்­ற­வா­சி­களின் வரவைக் கட்டுப்­ப­டுத்த கிரேக்­கத்­து­ட­னான தனது எல்லைப் பிராந்­தி­யத்தை மூடி­யதால் ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான குடி­யேற்­ற­வா­சி­களின் பயணம் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது.

இந்­நி­லையில் இடோ­மெனி பிராந்­தி­யத்தில் புதி­தாக குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்த தாயொ­ருவர் அந்தப் பச்­சிளம் குழந்தையை சாக்கடை நீரில் கழுவி சுத்தப் படுத்துவதை படத்தில் காணலாம்.