கசப்­பான மருந்­தென்று கூறி நஞ்சை வழங்­கா­தீர்கள்

Published By: Robert

14 Mar, 2016 | 09:14 AM
image

பொரு­ளா­தார நெருக்­க­டி­களால் பொது­மக்­க­ளுக்கு கசப்­பான மருந்தை வழங்­கு­வ­தாக கூறி நஞ்சை வழங்­கா­தீர்கள் என ஜே.வி.பி. எம்.பி.விஜித ஹேரத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் பாரிய அளவு கடன்­கள் பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­போது கடன்­படு தொகையில் அவை சேர்த்­துக்­கொள்ளப் பட­வில்லை என்­பதை நாம் சுட்­டிக்­காட்­டினோம். அப்­போது எதிர்­க்கட்­சியில் அமை­தி­யாக இருந்த நீங்கள் தற்­போது அதனை கண்­ட­றிந்து விட்டு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாது தவிக்­கின்­றீர்கள் எனவும் விஜித ஹேரத் எம்.பி. அர­சாங்­கத்தை கடு­மை­யாகச் சாடினார்.

வியா­ழக்­கி­ழமை நிதி அமைச்சின் வரிகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் கூறு­கையில்,

மொத்த உள்­நாட்டு உற்­பத்தி நூற்­றுக்கு நூற்­றுப்­பத்து சத­வீ­த­மாக வீழ்ச்­சியைக் கண்­டுள்­ளது. சந்­தி­ரி­காவின் ஆட்சிக் காலத்தில் நூற்­றுக்கு நூற்­று­ஐந்து சத­வீ­த­க­மாக காணப்­பட்ட வீழ்ச்­சியை 78 சத­வீ­த­மாக மாற்­றி­ய­தாக முன்னாள் ஜனா­தி­பதி அர­சாங்கம் தெரி­வித்­தது. இதற்­காக அவர்கள் பல நேரில்­மு­றை­களைக் கையாண்­டார்கள். அதி­க­ள­வான கடன்­களைப் பெற்­றார்கள். உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் கடன்­களைப் பெற்­றார்கள். ஆனால் அந்தக் கடன்­களை படு­க­டனில் உள்­வாங்­கி­யி­ருக்க வில்லை. இதனால் எவ்­வ­ளவு கடன் எங்­கி­ருந்து பெறப்­பட்­டது என்­பதை அறிய முடி­யா­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலை­மை­களை நாம் அன்­றைய காலத்­தி­லேயே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தோம். அப்­போது எதிர்க்­கட்­சியில் நீங்கள் அமை­தி­யாக இருந்­தீர்கள். தற்­போது 9 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா கடன் காணப்­ப­டு­வ­தா­கவும் அதன் தொகை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் பிர­தமர் சபையில் தெரி­வித்­துள்ளார்.

இன்று நீங்கள் இந்தக் கடன்­களை கண்­டு­பி­டித்து நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சிப் பாதையில் இருப்­ப­தாக காட்ட முனை­கின்­றீர்கள். இந்த விட­யத்தை நீங்கள் கண்­டு­பி­டிக்க வில்லை. படு­க­டன்­களில் இணைத்துக் கொள்­ளாத கடன்­களை கூறி உங்­க­ளது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாத இய­லா­மையை மறைக்க முயற்­சிக்­கின்­றீர்கள்.

மக்­களின் வரிச்­சுமையை அதிக­ரிப்­பதை மறைக்க முயற்­சிக்­கின்­றீர்கள். அரச ஊழி­யர்­க­ளுக்கு அடிப்­படைச் சம்­ப­ளத்தில் 10000 ரூபாவை கூட்டுவதாக வாக்­கு­று­தி­ய­ளித்­தீர்கள், தனியார் துறை­யி­ன­ருக்கு 2500 ரூபா சம்­ப­ளத்தை அடிப்­படைச் சம்­ப­ளத்­துடன் கூட்டுவதாக கூறி­னீர்கள். ஜன­வ­ரியில் நிறை­வேற்­று­வ­தாகக் கூறி­னீர்கள். நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதா என்­பதை உங்­களால் நிரூ­பிக்க முடி­யுமா? முடி­யாது. அதற்­கா­கவே இவ்­வா­றான கதை­களைக் கூறி வாக்­கு­று­தி­களை மறைக்க முயற்­சிக்­கின்­றீர்கள்.

இவற்­றுக்கும் அப்பால் நெல் (50 ரூபா), தேயிலை (80 ரூபா), இறப்பர் (350 ரூபா) உத்­த­ர­வாத விலையை வழங்­கு­வ­தா­கவும், உர­மா­னியம் வழங்­கு­வ­தா­கவும் கூறி­னீர்கள். இன்­று­வரை அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­ம­லேயே உள்­ளன. விவ­சா­யி­க­ளுக்கு உர­மா­னி­யத்தை 2500 ரூபா­வாக வழங்­கு­வ­தாக கூறி­னீர்கள் ஆனால் அதனை வழங்க முடி­யா­துள்­ளது.

2004 ஆம் ஆண்டு 350 ரூபா உர­மா­னியம் வழங்­குதல் உட்­பட விவ­சாயக் கொள்­கை­யொன்றை நாம் விவ­சா­யத்­துறை அமைச்சைப் பொறுப்­பேற்­றி­ருந்த சம­யத்தில் உரு­வாக்­கி­யி­ருந்தோம். அதனைப் பயன்­ப­டுத்திய இன்­று­வ­ரையில் செயற்­ப­டு­கின்­றீர்கள். புதிய திட்­டங்கள் எவையும் உங்­க­ளிடம் இல்லை. இவற்­றை­யெல்லாம் கைவிட்டு தற்­போது உலக பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வ­தா­கவும், நெருக்­க­டி­களை சந்­திப்பதாகவும் கூறு­கின்­றீர்கள்.

2015 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்­கடி ஏற்­ப­ட­வில்லை. உலக நாடுகள் சோரோஸின் கொள்­கையை பின்­பற்­றி­ய­மையால் 2008 ஆம் ஆண்டே நெருக்­க­டி­யினைச் சந்­திக்க ஆரம்­பித்­து­விட்­டன. பொரு­ளா­தார சம­நிலை அப்­போதே குழப்­ப­ம­டைந்­து­விட்­டது. 0.28 சத­வீ­தத்­தினால் உலகப் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­கண்­டு­விட்­டது. ஆகவே அத­னையும் மறைத்து கற்­பனை வாக்­கு­று­தி­க­ளையே வழங்­கி­யுள்­ளீர்கள். தற்­போது வற் வரி­யினை அதி­க­ரிக்­கின்­றீர்கள் (பெறு­ம­தி­சேர்­வரி) வற்­வ­ரியை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்­கமே கொண்டு வந்­தது. அன்று நிதி­ய­மைச்­ச­ராக சொக்­ஸியும் பிரதி நிதி­ய­மைச்­ச­ராக பந்­துல குண­வர்­த­னவும் இருந்­தார்கள். இன்று மீண்டும் அதனைக் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றீர்கள்.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்புவதற்கு முறை­யான கொள்­கை­களை அமுல்­ப­டுத்­துங்கள். கடந்த அர­சாங்­கத்தின் மீது பழியைப் போட்டு அனைத்­தையும் சுவரில் எழு­து­வ­தற்கு முயற்­சிக்­கா­தீர்கள் என்றார். இதே­வேளை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் நெருக்­க­டி­களில் தள்­ளி­விட்­டுள்­ள­தா­கவும் விஜித ஹேரத் எம்.பி. சுட்­டிக்­காட்­டினார்.அது குறித்து அவர் மேலும் கூறு­கையில் ஊட­க­வி­ய­லாளர் களுக்கு கடன் அடிப்­ப­டையில் மடி­க­ண­ினி­களை வழங்­கி­னீர்கள். 9 சத­வீ­தத்தில் 2 சத­வீ­தத்தை ஊட­க­வி­ய­லா­ளர்­களும் 7 சத­வீ­தத்தை அர­சாங்­கமும் வழங்­கு­வ­தாக வங்­கி­களில் கடன் பெற்­றீர்கள். தற்­போது அர­சாங்கம் செலுத்த வேண்­டிய 7 சத­வீ­தத்­தையும் சேர்த்து முழுக்­க­ட­னையும் செலுத்­து­மாறு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வங்­கிகள் நெருக்­க­டி­ய­ளிக்­கின்­றன. தற்போது இதற்கு யார் பொறுப்புக்கூறுவார்கள் எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58