இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்:மாவை சேனாதிராஜா 

Published By: R. Kalaichelvan

29 Sep, 2018 | 12:41 PM
image

நாங்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றோம் எமது மக்களுடைய விடயங்களில் அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக நகர்கின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.அன்று எம்மிடம் இரண்டு போராட்ட சக்திகள் இருந்தது.ஒன்று விடுதலைப் புலிகளின் ஆயுதபலம் மற்றையது எமது மக்களின் வாக்குப்பலம் அவற்றில் ஒன்றை நாம் இப்போது இழந்துள்ளோம்.எனவே தற்போது எம்மிடம் உள்ள மக்களின் ஜனநாயக பலத்தை மட்டுமே நம்பியுள்ளோம்.இந்த நிலையில் இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நேற்று  மாலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள ; மாநகர முதல்வர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள ஆகியோருக்கும் இடையே இடம் பெற்ற சிநேக பூர்வ கலந்துரையாடலில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும் போது எமது தேசத்தை இரண்டு காலகட்டங்களாக பிரித்தால் யுத்தத்திற்கு பின் யுத்தத்திற்கு முன் என இரண்டு காலகட்டங்களில் நோக்கமுடியும்.அவை இரண்டிலும் பிரிக்க முடியாதது.எம் மக்களின் கண்ணீர் நீடித்துக் கொண்டே உள்ளது.

அவற்றை தீர்க்க எமது தமிழகத்தின் மூலமாக கொடுக்கப்படும் செய்தி மத்திய அரசிற்கு சென்று அது இலங்கை அரசாங்கத்திற்கு தமிழரின் தீர்வு தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.எமது பிரச்சினையில் இந்திய தொடர்ந்து எமக்காக குரல் கொடுக்க வேண்டும் என இந்த இடத்தில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55