திருமணம் முதல் அவர்களது குடும்பத்தில் பிரச்சினை இருந்தது - தற்கொலையாயின் நிரூபிக்கவும் பெண் விரிவுரையாளரின் தாயார்

Published By: Vishnu

29 Sep, 2018 | 09:30 AM
image

உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்தினரின் தலைவர் டாக்டர் வி.ஜே.நவீன்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

உயிரிழந்த போதநாயகி தற்கொலை செய்தாரா? ஆல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது கண்டறிந்து ஒரு முடிவு தெரிய வேண்டும். ஒருவேளை அது தற்கொலை என்று கூறப்பட்டால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்பது கண்டறியப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்கு காரணம் எது? யாரால்? கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வேண்டும் என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட போதநாயகியின் தாயார்,

பேதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தது அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு உட்பட்டிருந்தார்.

இவர் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சதாரணமாக திருகோணமலைக்கு வந்தார். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று முரண்பட்டு இறுதி கிரியைக்கு கூட வரவில்லை என்றார்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழிகள் திணைக்களத்திலிருந்து பிரதான வாயில் வரை ஊர்வலமாக வந்த இப் போராட்டத்தில் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08