பாகிஸ்தான் பிரதமர் மாளிகையிலிருந்த எருமைகள் ஏலத்தில் விற்பனை

Published By: Digital Desk 4

28 Sep, 2018 | 01:45 PM
image

பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் நவாஷ் ஷெரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் .23 இலட்சத்து 2 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்ற பின் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்த 61 ஆடம்பர கார்கள் கடந்த வாரம் ஏலம் விடப்பட்டதன் மூலம் 20 கோடி வருமானம் கிடைத்தது.

மேலும் கூடுதலாக உள்ள 102 கார்கள், புல்லட் புரூப் வாகனங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்படவுள்ள நிலையில் பிரதமர் மாளிகையில் இருந்த 3 எருமை மாடுகள் மற்றும் 5 கன்றுகளை ஏலம் விட முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இஸ்லாமாபாத்தில் அவை ஏலம் விடப்பட்டன. அவை 23 இலட்சத்து 2 ஆயிரத்துக்கு ஏலம் போயின. அவற்றை முன்னாள் பிரதமர் நவாஷ் செரீப்பின் ஆதரவாளர்கள் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த எருமை மாடுகள் அனைத்தும் நவாஷ் செரீப் பிரதமராக இருந்த போது வாங்கப்பட்டது. எனவே அவரது ஆதரவாளர்கள் இதை விரும்பி ஏலத்தில் எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47