இரண்டு மாணவர்கள் வீட்டுப்பாட எழுதாதமையினால் அவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வகுப்பறையின் வெளியே இரண்டு மாணவர்கள் நிர்வாணமாக நிற்பது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சில நாட்களாக பரவி வருகிறது.

பொலிஸ் விசாரணையில், இந்த சம்பவம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி கேட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பயிற்சி வகுப்பில் நடந்தது தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்குச் விரைந்த பொலிஸார், அங்கு நடத்திய விசாரணையில் வீட்டு பாடத்தை எழுதாததால் 2 சிறுவர்களையும் தண்டிக்கும் வகையில் வகுப்பின் வெளியே நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியர்கள் கணேஷ்நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகியோர் என உறுதியானது.

இதையடுத்து அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.