தமிழ், சிங்கள மொழி பிரச்சினை - ஊவா மாகாண சபையில் அமளிதுமளி  

Published By: Vishnu

28 Sep, 2018 | 12:07 PM
image

ஊவா மாகாண சபை அமர்வின் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் மொழிப் பிரச்சினை ஆகியவற்றினால் சபை அமர்வில் பெரும் அமளிதுமளி இடம்பெற்று சபை அமர்வும் சில மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஊவா மாகாண சபை அமர்வு இன்று காலை சபைத் தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்படி அமளி துமளி ஏற்பட்டது.

ஊவா மாகாண சபை அமர்வு நிகழ்ச்சி நிரலில் சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தனினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சிங்கள மொழியில் சரியானதாகவும் தமிழ் மொழியில் பிழையாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 தமிழ் மொழியில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் பாரத்து பிரேரணையை முன்வைக்கும்போது  தம்மால் முன்வைக்கப்பட்ட பிரேரணை இதுவல்ல என்று சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன்கூறியதுடன், சிங்கள மொழியிலான நிகழ்ச்சி நிரலில் தமது பிரேரணை சரியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்றார்.

தமிழ்மொழி பிரேரணை நிகழ்ச்சி நிரலில் எவ்வகையில் பிழை ஏற்பட்டதென்று எனவும் சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் வினா எழுப்பினார்.

அதற்கு சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச  “பிரேணை நிகழ்ச்சி நிரலில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழை ஏற்பட்டிருப்பது உண்மைதான். சபை செயலாளர் அலுவலகத்தினால் இப் பிழை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பிழைகள் இனிமேல் ஏற்பட எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. அதனைப் பொருட்படுத்த வேண்டாம். தங்களிடமிருக்கும் பிரேரணைப் பிரதியின் மூலம் தெளிவுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

இதையடுத்து சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் தமதுரையினை தமிழ் மொழியில் ஆற்ற முற்பட்டார். இதன்போது சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராய்ச்சி எழுந்து தமது மேசையில் மொழி பெயர்ப்பு ஒலிவாங்கி பொறுத்தப்படாமலிருப்பதால் தமிழில் உரையாற்றுவது எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையினால் அவ் உறுப்பினரை சிங்க மொழியில் உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தமிழ்மொழியினாலான உரையை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் தமிழ் மொழியில் உரையாற்றுவதை தவிர்க்கவும்” என்றார்.

இதற்கு சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் தமதுரையில் 13வது திருத்தச் சட்டப் பிரகாரம் தமிழ் மொழியில் எம்மால் பிரேரணைகளை சமர்ப்பிக்க முடியும். இதற்கு எவராலும் எதிர்ப்பு தெரிவிர்க்க முடியாது.

கடந்த மூன்றரை வருடகாலமாக இது போன்ற நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது. தமிழ் உறுப்பினர்கள் இதுவிடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் போது எமக்கு பட்டர் பூசப்படுகின்றது. எமக்கு கற்பித்து கொடுக்க

முன்வரவேண்டாம். எம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  இச்சபையில் பிரேரணையாக கொண்டு வந்து அவற்றினை நிவர்த்தி செய்ய வேண்டியது எமது கடமை. எமக்கு ஏற்படுகின்ற புறக்கணிப்பினால் இச் சபையின் நிருவாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் இராஜிநாமாச் செய்கின்றேன்” என்று கூறினார்.

இவ் இராஜிநாமாவை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சபைத் தலைவர் கூறிய போதிலும் சபை உறுப்பினர் சபையின் நிருவாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து எனது இராஜிநாமா உறுதியானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37