ஊடக சுதந்திரமும் சமூகப்பொறுப்பு பற்றிய கொழும்பு பிரகடன மாநாடு

Published By: Priyatharshan

27 Sep, 2018 | 01:52 PM
image

ஊடகசுதந்திரமும் சமூகப்பொறுப்பு பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம் ஏற்பாடு செய்துள்ள 3 நாள் மாநாடு இன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.

தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறும் மாநாட்டில் பல ஆற்றுகையாளர்கள் கலந்துகொண்டு அமர்வுகளை நெரிப்படுத்தவுள்ளனர்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல், மவுட்லவேனியா ஹோட்டல் மற்றும் இலங்கை பத்திரிக்கை ஸ்தானம் ஆகியவற்றில் மாநாடு இடம்பெறவுள்ளது.

ஊடகசுதந்திரம், சமூக பொறுப்புணர்வு ஆகியன தொடர்பான கொழும்பு பிரகடனம்  1998 ஆம் ஆண்டு ஏப்பரல் மாதம் கைச்சாத்திடப்பட்டது.

அவ்வேளையில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வசே ஊடகம் குறித்த கருத்தரங்கொன்றையடுத்து இலங்கை செய்திப் பத்திரிக்கையாளர்கள் சங்கம், சுதந்திர இயக்க ஊடகம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை பத்திரிக்கை ஆசிரியர்கள் சங்கம் இப் பிரகடனத்தில் கைச்சாத்திட்டது.

சர்வதேச அமைப்புகளில் உலக செய்திப் பத்திரிக்கைகள் சங்கம், சர்வதேச பத்திரிக்கைகள் நிலையம், பொதுநலவாய பத்திரிக்கை ஒன்றியம், Article - 19, தென்னாபிரிக்க ஊடக நிலையம்  ஆகிய 1998 ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனத்தை ஆதரிக்கும் அமைப்புகளில் இடம்பெறுகின்றன.

ஊடக சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரச்சார இயக்கம் இடம்பெற்ற நிலையில் ஊடகம் தொடர்பான கருத்தரங்க நடைபெற்றது. இந்த பிரசார  இயக்கத்தின் பயனாக 2002 ஆம் ஆண்டில் குற்றவியல் அவதூறு தொடர்பான சட்டங்கள் பாராளுமன்றத்தில் ஏகமனதாக ஒழிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனம், இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழு, இலங்கை ஊடக கல்லூரி ஆகிய நிறுவப்பட்டன. இலங்கை பத்திரிக்கை ஆசியர்கள் சங்கம் , பத்திரிக்கை அதிபர்  ஒழுக்க கோவையொன்றை வரைந்தது. இலங்கை உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு பிரகடனத்தில் கைச்சாத்திட்டது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியோ போரம், தெற்காசிய சுதந்திர ஊடக சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் ஆகிய கொழும்பு  பிரகடனத்தின் இணைப் பங்காளிகளாகும். 

2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் ஆதரவுடன் கொழும்பு பிரகடனம் மறுசீரமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் கொழும்பு பிரகடனத்தின் ஒரு கோரிக்யைுமான தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08