அணியின் மோசமான துடுப்பாட்டம் குறித்து பாக்கிஸ்தான் தலைவர் ஏமாற்றம்

Published By: Rajeeban

27 Sep, 2018 | 10:51 AM
image

பாக்கிஸ்தான் அணியின் மோசமான துடுப்பாட்டமே ஆசிய கிண்ணத்தொடரில் அணி தோல்விகளை சந்தித்தமைக்கான காரணம் என அணியின் தலைவர் சப்ராஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் உடனான போட்டியில் தோல்வியடைந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்த பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

 ஒரு அணியாக நாங்கள் சிறந்த முறையில் உணரவில்லை ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வீரர் என்ற வகையில் நானும் சிறப்பாக விளையாடவில்லை நானும் சிறப்பாக விளையாடியிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியின் அனைத்து அம்சங்களிலும்; நாங்கள் மோசமாக விளையாடினோம்,இந்த தொடரில் பல தடவைகள் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்காரே எங்கள் முக்கிய துடுப்பாட்ட வீரர் அவர் சிறப்பாக விளையாடவில்லை,சடாப் காயத்தினால் பாதிக்கப்ட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிறந்த அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் சிறப்பாக விளையாடவேண்டும், எங்கள் மோசமான துடுப்பாட்டமே தொடரில் எங்கள் தோல்விகளிற்கு காரணம் எனவும் சப்ராஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  பாக்கிஸ்தானுடான வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஸ் அணியின் தலைவர் மஸ்ரபி மோர்ட்டாசா அணியின் களத்தடுப்பு குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

மிகநீண்டகாலமாக நாங்கள் இவ்வாறு சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை எதிர்காலத்திலும் இவ்வாறே களத்தடுப்பில் ஈடுபடுவோம் என எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் இன்னமும் முன்னேற்றம் காணவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59