மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் பாதிக்கப்படலாம் என அச்சம்

Published By: R. Kalaichelvan

27 Sep, 2018 | 09:22 AM
image

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.

மன்னார்    நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் சதொச வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப்பபடுத்தப்படும் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது. 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்ட அகழ்வு பணியானது அதன் பிறகு இன்று வரை இடம் பெறவில்லை.

எனினும்  உரிய விதமாக பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னாரில் தற்போது  மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றது .

கடந்த திங்கட்கிழமை மழை பெய்துள்ளது. அதனால் குறித்த வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுட்ட போதும் சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அந்த ஏற்பாடுகளும் ஓழுங்கின்றி காணப்படுவதனால் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சோதப்படும் வாய்புக்கள் காணப்படுகின்றது .

எனவே உரிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் அக்கரையுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08