“தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது”

Published By: Digital Desk 4

26 Sep, 2018 | 06:53 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சிக்கு ஒருவருடமாகியுள்ளது என தெரிவித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017 செப்டம்பர் 26ஆம் திகதி சப்ரகமுவ மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைந்தது. இற்றைக்கு ஒருவருடமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபை நிர்வகிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலூடாக  தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. மாகாணசபை தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாததொரு சூழலலே தற்போது ஏற்பட்டுள்ளது.

இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்படுத்தும் நோக்கில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை முன்வைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அதன் பிரதான நோக்கமாக இருந்தது தேர்தலை பிற்படுத்துவதே அன்றி, தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்வதல்ல என்பது தற்போது தெளிவாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38