சிறுவர் தின நிகழ்ச்சிகளை இவ்வாண்டுக்குரிய தொனிப்பொருளில் நடாத்தவும்

Published By: Digital Desk 4

26 Sep, 2018 | 03:04 PM
image

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சிகளை, சகல அரசாங்கப் பாடசாலைகளிலும், இவ்வாண்டுக்குரிய தொனிப் பொருளில் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

"தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக நமது சிறார்களைப் பலப்படுத்துவோம்" என்பதே, இவ்வாண்டுக்கான உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும். 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இத்தொனிப் பொருளிலேயே, சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

சகல மாகாணங்களிலுமுள்ள கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பிலான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01