உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்

Published By: Digital Desk 4

27 Sep, 2018 | 11:18 AM
image

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில்

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நல்லூர் ஆலய வீதியில் உள்ள திலீபனின் நினைவுதூபி முன்பாக இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

காலை 10 மணிக்கு பருத்துறை வீதியில் உள்ள திலீபனின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டனர். 

இதனை தொடர்ந்து தென்மராட்சி பகுதியில் இருந்து தூக்கு காவடி எடுத்து வந்த இரு இளைஞர்கள் தியாகி திலீபனுக்கு அஞ்சலியை செலுத்தினர். அதனை தொடர்ந்து 10.48 மணிக்கு தியாகி திலீபன் உயிர்நீத்த அந்த நேரத்தில், நல்லூர் வடக்கு வீதியில் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த அந்த இடத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து மீண்டும் பருத்துறை வீதியில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. 

எந்த விதமான கட்சி பேதங்களுமின்றி - முன்னுரிமைகளின்றி உணர்வு பூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வட கிழக்கு மூலையில் தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடத்தில் மிகச் சரியாக 10 : 48 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

இந் நிகழ்வில், யாழ். மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், மூத்த முன்னாள் போராளி மனோகர் ( காக்கா அண்ணன்), ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரமுகர்கள் உட்பட பெருமளவான முன்னாள் போராளிகள், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில்

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு திலீபன் உயிர் நீத்த 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. 

குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்புாது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் இடம்பெற்றது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் நினைவேந்தல்

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது தியாகி திலீபனுக்கு மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

பருத்தித்துறையில்

பருத்தித்துறை மருதடியில் உள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபி மற்றும் பருத்தித்துறை, சுப்பர்மடம் கடற்கரை வீதியில் அப்பகுதி மக்களின் ஏற்பாட்டில் எழிச்சிப் பாடல்களுடன் தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. 

தியாகி திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பதாக நினைவேந்தல் உணர்வு பூர்வமாக இடம் பெற்றது. பருத்தித்துறை மருத சிவன் கோவிலடி வளாகத்தில் போர் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி முன்பதாக தியாகி திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவீரன் ஒருவரின் தாயார் ஈகைச்  சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.இந் நினைவேந்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் பருத்தித்துறை நகர,பிரதேச சபை,கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்“

வல்வெட்டித்துறையில்

வடமராட்சி வல்வெட்டித்துறையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

முல்லைத்தீவில் 

தியாகச்சுடர் திலீபனின் இறுதி நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள வடமாகணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மேலும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் தியாகதீபம் திலிபனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். 

யாழ். பல்கலையில்

தியாக திலீபனின் நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் 

வவுனியாவில் கடந்த 581ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தயாகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட சங்கத்தின் உறவுகளின் குடும்ப உறுப்பினர்களால் இன்று பிற்பகல் 4.30மணியளவில் தியாக தீபம் திலீபனுக்கு  நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46