வவுனியா நகரசபையால் நகரிலிருந்து 600தொண் குப்பை அகற்றப்படுகின்றது

Published By: R. Kalaichelvan

26 Sep, 2018 | 12:43 PM
image

வவுனியா நகரசபையினரால் நகரத்திலிருந்து ஒரு மாதத்திற்கு 600தொண் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றனர் என்று தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவலுக்கு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நகரத்திலிருந்து அகற்றப்பட்டு வரும் குப்பைகள் நகரிலிருந்து 10கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பம்பைமடு பகுதியில் குப்பை மீள் சூழற்ச்சி செய்யப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. எனினும் அங்கு மீள் சுழற்சி செய்யப்படவில்லை. 

வவுனியா நகரிலிருந்து ஒரு நாளைக்கு 18 தொடக்கம் 20 தொண் வரையான குப்பைகள் உழவு இயந்திரம் கனரக வாகனங்களில் அகற்றப்பட்டு வருகின்றன. 

எனினும் அகற்றப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை அதேபோன்று ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை. 

சாரதிக்கு ஏற்பதுபோல தான் விரும்பிய இடங்களிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனைச் சென்று பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டால் ஒழுங்கு முறை பின்பற்றி செயற்படுவதில்லை. 

சுகாதாரப்பரிசோதகர் இப்பகுதிக்குச் சென்று தனது கடமைகளை சரிவர மேற்கொள்வதில்லை. அதற்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இங்கு பாதுகாப்புக்கடைமையிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர்ந்து கடமையாற்றுவதில்லை. அங்கு கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுவாசப்பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். இக்குப்பைகள் இரும்புகள் எடுக்க வருபவர்களினால் எரிக்கப்பட்டு வருகின்றன.கடந்த யூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து யூலை மாதம் முதலாம் திகதிவரையான ஒரு மாத காலப்பகுதியில் நகரசபையினால் 600தொண் குப்பைகள் நகரிலிருந்து அகற்றப்பட்டு பம்பைமடுவில் கொட்டப்பட்டுள்ளது. இக்குப்பைகள் அனைத்தும் மீள் சூழற்சி மேற்கொள்ளப்படவில்லை. 

இவ்வாறு மீள் சூழற்சி மேற்கொள்ளாமல் கொட்டப்படுவதால் நகரசபையினருக்கு கிடைக்கும் வருமானம் இன்றிச் செல்கின்றது. இக்குப்பைகள் மீள் சுழற்சி மேற்கொள்வதால் பலருக்கு வேவைவாய்ப்புக்கள் கிடைக்கவும் வழிகள் ஏற்படுவதுடன் நகரசபைக்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00