ஹட்டனில் டெங்கு ஒழிப்பு பேரணி

Published By: Digital Desk 4

26 Sep, 2018 | 12:19 PM
image

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக ஹட்டனில் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் இன்று ஹட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடனான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி ஹட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னாள் ஆரம்பமாகி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றுள்ளனர்.

இதன் போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

அத்துடன் ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19