49 நாட்கள் கடலில் தவித்த மீனவர் உயிருடன் மீட்பு

Published By: Digital Desk 4

25 Sep, 2018 | 07:43 PM
image

இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் சிக்கி படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர்  ஒருவர் 49 நாட்களுக்கு பின்  உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். .

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்த 19 வயதான ஆல்டிநோவல் அடிலாங் என்பவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.

கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.

49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. அவர்களிடம் உதவி கோரினார். யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

49 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு கப்பலுக்கு “ரேடியோ சிக்னல்“ மூலம் தகவல் வழங்கி தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினார். இதனையடுத்து அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.

கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.

கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்ததாகவும் கூறினார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50