அற்­பு­தங்கள் நடை­பெ­று­வ­தற்­கான சான்றே குழந்­தைகள். மகிழ்ச்­சியின் குவி­ய­லான இந்த அற்­பு­தத்தை அடை­யவே எல்லா தம்­ப­தி­யி­னரும் விரும்­பு­கின்­றனர். ஆனால் சில வேளை­களில் தம்­ப­தி­யி­னரின் இந்த கனவு நிறை­வே­று­வதில் சிரமம் ஏற்­ப­டு­கி­றது. தாய்­மைப்­பேறு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை நாம் ஒவ்­வொ­ரு­வரும் அறிவோம். இந்த மகப்­பேற்றுச் சிக்­கல்­களை தீர்த்து அவர்­களின் குழந்தைப் பேற்றுக் கனவை நிறை­வேற்ற இன்று ஏரா­ள­மான நவீ­ன­ம­ருத்­துவ வச­திகள் வந்து விட்­டன என்­கிறார் டாக்டர் சாமுண்டி சங்­கரி.

ஏ.ஆர்.டி.- ஓர் அறி­முகம்

அசிஸ்டட் ரீப்­ரொ­டக்டீவ் டெக்னிக்ஸ் (ஏ.ஆர்.டி) என்ற கரு­வு­று­த­லுக்கு துணை செய்யும் தொழில்­நுட்­பங்கள் இயற்­கையாய் கரு­வுற தடையாய் இருக்கும் சிக்­கல்­க­ளுக்­கான சிறந்த தீர்­வாக இருக்­கி­றது. ஆணின் விந்­த­ணு­வையும் பெண் ணின் கரு­முட்­டை­யையும் பரி­சோ­தனை கூடத்தில் கரு­வு­றச்­செய்து தரித்த கருவை பெண்ணின் கருப்­பையில் பதித்து அங்கே இயற்­கையாய் வள­ரச்­செய்­வதே இம்­மு­றை­யாகும்.

ஏஆர்.டி. யில் 30 வருட கால ஆழ்ந்த அனு­ப­வத்­துடன் முன்­னோ­டி­யாக திகழ்­கிறார் டாக்டர் சாமுண்டி சங்­கரி. சிருஷ்­டியில் அவ­ர­வரின் தனித்­தன்­மைக்­கேற்ப சிகிச்­சைகள் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வதால் ஐ.வி.எப். முறையில் 55 சத­வீ­கி­தத்­திற்கும் மேல் கரு­வு­று­வதில் வெற்றி கிடைக்­கி­றது. ஐ.வி.எப். முறையை மேலும் சிறப்­பாக்க பல புது­மை­யான சிகிச்சை முறை­க­ளையும் புகுத்தி டாக்டர் சங்­க­ரியின் மேற்­பார்­வையில் குழந்தை பெற்றுக்.கொள்ளும் வாய்ப்பை பன்­ம­டங்கு அதி­கப்­ப­டுத்தியுள்ளனர்.

யாருக்கு ஐ.வி.எப். தேவை?

ஐ.வி.எப். முறை, கருக்­குழாய் அடைப்பு, ஆணின் மலட்­டு­தன்மை, கருப்பை சுவரின் தடிப்­புப்­ப­டலம், சினை­முட்டை குறைபாடு, சினைப்­பையின் செயல்­திறன் குறைவு, 30வய­திற்கு மேற்­பட்டு கரு­வு­றுதல், தொடர் கருச்­சி­தைவு மற்றும் காரணம் அறிய முடி­யாத கரு­வுற முடி­யாமை போன்­ற­வை­க­ளுக்கு தேவைப்­ப­டு­கி­றது. கருத்­த­ரிப்­ப­தற்கு முன்­பாக மர­பணு பரி­சோ­தனை செய்து பார்க்க விரும்பும் பெற்­றோ­ருக்கும் கரு­முட்டை மற்றும் கருவை உறை­யச்­செய்து பாது­காத்து வைத்து பின்னர் குழந்தை பெற்று கொள்ள விரும்­பு­ப­வர்­க­ளுக்கும் ஐ.வி.எப். முறை பய­னுள்­ள­தாகும். ஒரு முழு­மை­யான ஐ.வி.எப். சுழற்சி என்­பது 3-4 வார கால சிகிச்சை முறை­யாகும்.

ஐ.சி.­எஸ்.ஐ – ICSI

ஐ.வி.எப். போல ஐ.சி.­எஸ்.ஐ. என்­பதும் ஏ.ஆர்.டி. முறை­களில் ஒன்று ஆண் மலட்­டு­தன்­மையோ ஐ.வி.எப். தொடர்ந்து தோல்வி அடைந்­தாலோ இம்­முறை உத­வு­கி­றது. இம்­மு­றையில் ஆண் தர­மான ஒரே விந்­த­ணுவை தேர்ந்­தெ­டுத்து அதை பெண்ணின் கரு­முட்­டையில் ஊசி மூலம் செலுத்தி கரு­வு­றச் ­செய்­யப்­ப­டு­கி­றது. பிறகு கருவை பெண்ணின் கருப்­பையில் பதித்து வள­ரச்­செய்யும் முறையே ஐ.சி.­எஸ்.ஐ. முறை.

க்ரீன் ஐ.வி.எப். -Green IVF

ஐ.வி.எப். முறையை விட க்ரீன் ஐ.வி.எப். முறையில் பல நன்­மைகள் உண்டு அதில் குறிப்­பாக ஒவே­ரியன் ஹைபர் -ஸ்டிமு­லேஷன் சின்ட்ரோம் கொன­டோட்­ராபின் ஊசி இல்­லாமை அல்­லது குறை­வாக உாயோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­வது. அதி­க­மான கரு உரு­வா­காமல் தடுப்­பது அதன் மூலம் ஒன்­றுக்கு மேற்­பட்ட கர்ப்பம் தரிக்­காமல் காப்­பது போன்ற நன்­மைகள் அடங்கும். இம்­முறை அதி­க­மாக ஊக்­கப்­ப­டுத்­தப்­படும். பிரச்­சினை உள்ள பெண்­க­ளுக்கு முப்­பது வய­திற்கு குறை­வான பெண்­க­ளுக்கு பொருத்­த­மா­னது. இம்­மு­றையை ஆண் மலட்­டுத்­தன்மை பிரச்­சினை உள்ள தம்­ப­தி­ய­ருக்கே பரிந்­து­ரைக்­கப்படுகிறது.

ஐ.யு.ஐ. -IUI

பழை­மை­யான இந்த கருத்­த­ரிப்பு முறை 18 ஆம் நூற்­றாண்டில் இறு­தி­யி­லி­ருந்தே பின்­பற்­றப்­பட்டு வரும் முறை. ஆணின் விந்­த­ணுவை எடுத்து நேர­டி­யாக பெண்ணின் கருப்­பையில் செலுத்­தப்­படும். இம்­மு­றையில் இன்று விந்­த­ணுவை நன்கு சுத்­தப்­ப­டுத்தி துடிப்­பான தர­மான விந்­த­ணுவை தேர்ந்­தெ­டுத்து செலுத்த முடி­வதால் அதிக வெற்றி வாய்ப்பை தரு­கி­றது. இதன் மூலம் அதி­க­மான எண்­ணிக்­கையில் தர­மான விந்­த­ணுக்­களை செலுத்­து­வதால் கருத்­த­ரிக்கும் வாய்ப்பும் அதி­க­ரிக்­கி­றது. இம்­முறை ஐ.வி.எப். முறையை விட சுல­ப­மா­னதும் செலவு குறை­வா­னதும் குறை­வான நேரம் தேவை­ப­டு­வதும் ஆகும்.

இந்த முறை காரணம் அறிய முடி­யாத மலட்­டுத்­தன்மை, ஆண் மலட்­டுத்­தன்மை மித­மாக இருப்­பது, விந்து வெளிப்ப­டு­வதில் சிக்கல், இருப்­பது கருப்பை வாய் பகு­தியில் திர­வ­க­சிவு இருப்­பது, கருப்பை வாய் திசுக்­களில் வடுக்கள் இருப்­பது மற்றும் கருப்பை சுவர் தடிப்பு படலம் போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமை­கி­றது. 35 வய­திற்கு உட்­பட்ட பெண்­க­ளுக்கே இம்­முறை வெற்­றி­ய­ளிப்­ப­துடன் சரா­ச­ரி­யாக இம்­மு­றையில் ஒரு சுழற்­சியில் 10--20 சத­வீத வெற்றி கிடைக்­கி­றது.

லேசர் அசிஸ்டட் ஹேட்சிங்

-Laser Assisted Hatching

சில பெண்­க­ளுக்கு கரு முட்­டையின் ஓடு (ஜோனா பெலு­சிடா) தடித்து இருக்கும் இதனால் தரித்த கருவை ஐ.வி.எப். போன்ற முறை­களில் கருப்­பையில் செலுத்­திய பிறகு கரு முட்­டை­யி­லி­ருந்து வெளி­வந்து சுவற்றில் பதி­வது இல்லை. எனவே முட்­டையில் ஓட்டை உடைந்து விடும் தொழில்­நுட்பம் மூலம் இப்­பி­ரச்­சி­னையை சரி செய்ய முடி­கி­றது. இதுவே லேசர் அசிஸ்டட் ஹேட்சிங் இதை வயது முதிர்ந்த தாய் கருவின் தரம் குறைந்­தி­ருத்தல் பாலிக்கல் ஸ்டிமு­லேஷன் சின்ட்ரோம் என்ற பிரச்சினை உள்ள பெண்கள் போன்றோருக்கு செய்யப் படுகிறது.

ப்ரீ- ஜெனடிக் இன்ப்ளான்டேஷன் டயாக்னாஸ்டிக்- PGD

கருப்­பையில் தரித்த கருவை செலுத்­த­வ­தற்கு முன்­பாக மர­பணு பரி­சோ­தனை செய்ய முடி­வதால் மர­பியல் நோய்கள் தடுக்­கப்­ப­டு­வ­தற்கும் கரு­ச்சி­தைவு ஏற்­ப­டு­வதை தடுப்­ப­தற்கும் உத­வி­யாக இருக்­கி­றது. மர­பியல் பிரச்­சினை இருக்கும் பெற்­றோ­ருக்கும் இது ஒரு மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சா­த­மாகும்.

இலங்கை: 0772646800

இந்தியா: 00918508501111