ட்ரம்பே காரணம் : வெள்ளை அறிக்கை வெளியிட்டது சீனா

Published By: Daya

25 Sep, 2018 | 04:43 PM
image

அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே மோதல் அதிகரித்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அடாவடிப் போக்கே காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையில் பனிப்போர் தொடர்ந்து நடந்து வந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் மோதல் அதிகரித்துள்ளது.

சீனா ரஷ்யாவுடன் நட்புறவை அதிகரித்தமையே இம் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

சீனாவின் வர்த்தக ரீதியான அணுகு முறை தவறாக இருப்பதாக் கூறி 267 பில்லியன் டொலர் அளவிற்கு பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அதன் ஆரம்பகட்டமாக 34 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் மீது 10சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 60 பில்லியன் டொலர் அளவிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வரி விதிக்க சீனா முடிவெடுத்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான பொருளாதார போர் உச்சத்தை அடைந்துள்ள  நிலையில் அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி சீனா சீன மொழியில் 36000 எழுத்துக்களில் 6 பகுதிகளாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில்,

 

உலகின் வளரும் நாடுகளில் சீனா மிகப் பெரியது என்றும் உலகின்ன மிகப் பெரிய வளர்ந்த நாடு அமெரிக்கா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு அமெரிக்கா சீனாவிற்கு மட்டுமன்றி உலக பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் உறவுகளை சீர்படுத்த பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவை முன்னிறுத்தி ட்ரம்ப் செயல்படத் தொடங்கியதும்  இரு தரப்பு சுமூக உறவை மீறும் வகையில் நடந்ததுமே கருத்து வேறுபாடுக்கு முக்கிய காரணம் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான உறவை சுமூகமக தொடர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா அவற்றை புறந்தள்ளி மோதல் போக்கை தொடர்வதாகவும் சீனா குற்றஞ் சாட்டி இரு அரசுகளும் இரு நாட்டு மக்களும் காலம் காலமாக வளர்த்து வந்த உறவை ட்ரம்பின் நடவடிக்கைகள் சிதைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இரு வேறு கட்டங்களில் இருப்பதால் மோதல் ஏற்படுவது இயற்கை என்றும் அவற்றை சரி செய்ய இரு தரப்பு நம்பிக்கை ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம் என்றும் சீனா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10