சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது - கோத்தபாய 

Published By: Vishnu

25 Sep, 2018 | 04:09 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். 

பொலன்னறுவையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்ஷவின் 9 ஆண்டு கால ஆட்சி காணப்பட்டது. பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற நாட்டில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சர்வ இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய ஒரு கொள்கை முன்னெடுக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனை ஊடாக நாட்டின் விவசாயிகளுக்கு சிற்நத சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று தேசிய வர்த்தகங்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் என பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மஹிந்தராஸ பக்ஷ ஆட்சி காலத்தில் பாரிய யுத்திற்கு முகங்கொடுத்தும் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படாது முன்னோக்கி கொண்டு சென்றோம். ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலையான கொள்ளையோ பொருளாதார இலக்குகளோ அற்ற நிலையில் நாடு படு பாதாளத்தில் விழுந்துள்ளது. முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது. நான்கு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போனது.

பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் அரசாங்கம் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்தின் ஊடாக வெற்றி இலங்கை அடைவதற்கான கொள்கைகளை தயாரித்து வருகின்றோம். தொழில் சார் நிபுணர்கள், புத்தி ஜீவக்ள உள்ளிட்ட பல் துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்களை உள்வாங்கி திட்டமிடுகின்றோம். எதிர் தரப்பினரை பழிவாங்கும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

இன்று நாட்டில் பல்வேறு வகையிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் , பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. வடக்கில் இராணுவம் போரிடும் போது தெற்கில் நகரங்களைப் பாதுகாப்பதில் பொலிஸார் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ஆனால் இன்று பல்வேறு வகையிலும் அவர்கள் பழிவாங்கள்களுக்கு உட்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் பொலிஸ்மா அதிபர்கள் நேர்மையாகச் செயற்பட்டனர்.

கட்டுநாயக்கவில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடுத்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் 2 வருடங்களுக்கு முன்பதாகவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால் இன்று பொலிஸ் மா அதிபரின் செய்றபாடுகள் கோமாளித்தனமாக உள்ளதை ஊடகங்களில் காண முடிகிறது.

புதிய நீதி மன்றத்தை ஸ்தாபித்து அதில் முதலாவது வழக்காக டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு தூபி அமைத்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நினைவு தூபி அமைத்தமை தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதாக காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இவர்கள் கொண்டு வந்த அமைதி என்ன? பாரிய போரை நிறுத்தி மஹிந்தராஜ பக்ஷ நாட்டில் உருவாக்கிய ஜனநாயத்தையும் சமாதானத்தையும் யாரும் மறந்துவிட முடியாது. நாட்டைக் கையளிக்கும் போது யாருக்கும் அச்சுறுத்தல் இருந்ததில்லை.

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது. தேசிய பாதுகாப்புக்காக நிறுவப்பட்டிருந்த புலனாய்வு திட்டங்கள் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் சீரழிந்து விட்டது. புலனாய்வு பிரிவுகளில் எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை.

ஆகவே வெளிப்படையாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவர் ஒருவரினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாக தீர்மானங்கள் எடுக்கக் கூடிய தலைவருடன் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04