கொலி­வூட்டின் புன்­னகை அரசி என்று போற்­றப்­படும் நடிகை சினேகா, 'அச்­ச­முண்டு அச்­ச­முண்டு' என்ற படத்தில் நடித்­த­போது அந்த படத்தின் ஹீரோ பிர­சன்­னாவை காத­லித்து பின்னர் அவரை திரு­மணம் செய்து கொண்டார். இந்த நட்­சத்­திர தம்­ப­திக்கு விகான் என்ற மகன் சமீ­பத்தில் பிறந்தார்.

ஆன்­மீ­கத்தில் மிகுந்த நம்­பிக்­கை­யுள்ள சினேகா, சமீ­பத்தில் கணவர் மற்றும் குழந்­தை­யுடன் பழனி மலைக்­கோ­வி­லான தண்­டா­யு­த­பாணி கோவி­லுக்கு சென்று சுவாமி தரி­சனம் செய்­துள்ளார். மேலும், கோவிலில் இருந்த தங்­கத்­தேரை இழுத்த சினேகா தம்­ப­தி­யினர் பின்னர் தங்­கத்­தொட்­டிலில் தங்கள் மகனை படுக்க வைத்தும் அழகு பார்த்­தனர். சினே­கா-­–பி­ர­சன்னா தம்­ப­தி­களை கோவில் நிர்வாகிகள் வரவேற்று சிறப்பு பிரசாதங்களை வழங்கியுள்ளனர்.