மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் கிங்கோரா பிரிவில் வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் 3000 ரூபாய் தண்ட பணமாக அறிவித்து விடுதலை செய்துள்ளார்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுள்ளனர். இதன்போது இரண்டு கஞ்சா செடிகள் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவர் தனது வீட்டு முற்றத்தில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்செய்த பொழுது நீதவான் 3000 ரூபாவை தண்ட பணமாக அறிவித்து சந்தேக நபரை விடுதலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.