மீரிகமை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் மோதியதில் பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

காலி - எல்பிடிய தலாவ பிரதேசத்தினை சேர்ந்த குறித்த பெண் மீரிகமையில் இருந்து பொல்கஹவெலை நோக்கி பயணித்த புகையிரதில் மோதுண்டதினாலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.