எனது பாதுகாப்பை பலப்படுத்துங்கள் - கோத்தா

Published By: Vishnu

24 Sep, 2018 | 09:06 AM
image

பாதாள உலக குழுத் தலைவர் மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ளது என்று   முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பல்­வேறு நம்­ப­க­மான வழி­களினூடாக சரி­பார்த்துக் கொண்­டதில், இத் தகவல் உண்­மை­யா­னது என்று தெரிய வந்­துள்­ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழு­மை­யான எண்­ணிக்கை கொண்ட பாது­காப்பு அணியை மீளப்­பெ­று­வது குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பேசினேன்.

எனது பாது­காப்பு அணி பாதி­யாகக் குறைக்­கப்­பட்டு விட்­ட­தாகக் கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்­வ­தாக இணங்­கிய போதிலும் அதற்குப் பின்னர் அவ­ரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இது நடந்து ஒன்­றரை மாதங்­க­ளாகி விட்­டது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யாகும் போது என் மீது தாக்­குதல் நடத்தத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.  பாதாள உலகக் குழுத் தலை­வரின்  இந்த முயற்­சியை அறிந்து கொண்டு நான் மேல­திக முன்­னேற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­ததேன்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் என்­னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்­றிய செய்­திகள் வெளி­யா­னதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இரா­ணுவ அதி­கா­ரிகள், பொலிஸ் அதி­கா­ரிகள், பலர் தொலை­பே­சியில் அழைத்து மேல­திக பாது­காப்பு முன்­னேற்­பா­டு­களைச் செய்­யு­மாறும் உள்ளூர் பய­ணங்­களை குறைத்துக் கொள்­ளு­மாறும் கேட்டுக் கொண்­டனர்   என்று கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.  மேலும் தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு கோத்தபாய ராஜபக் ஷ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21