பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: Vishnu

23 Sep, 2018 | 11:59 PM
image

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தவானின் சிறப்பான ஆரம்ப துடுப்பாட்டம் காரணமாக இந்திய அணி 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றியை ஈட்டியது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் முதலில் துடுப்பெடுத்ததாடுவதற்கு தீர்மானித்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் சார்பில் மலிக் 78 ஓட்டத்தையும், சப்ராஸ் அஹமட் 77 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர்.

238 என்ற வெற்றியிலக்கனை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான அணித் தலைவர் ரேஹாகித் சர்மா ஆகியோரின் சிறந்ததொரு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணிப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை இவர்கள் இருவரும் இணைந்து பந்தாட விக்கெட்டுக்களை வீழ்த்த பந்து வீச்சாளர்கள் வகுத்த வியூகங்கள் அனைத்தையும் இவர்கள் உடைத்தெறிந்தனர். 

30 ஓவர்களின் அணி 179 ஒட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றுக் கொள்ள ரேஹித் சர்மா 91 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டத்துடனும் தவான் 90 பந்துகளை எதிர்கொண்டு 94 ஓட்டத்துடனம் ஆடுகளத்திலிருந்தனர். 

32.1 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 94 ஓட்டங்களை பெற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 7000 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார். இவரையடுத்து ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்ட வந்த தவான் 32.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசியதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 15 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்தும் அதே ஓவரில் நான்காவது பந்தில் ஒரு 6 ஓட்டத்தையும் இறுதிப் பந்தில் ஒரு 4 ஓட்டத்தையும் விளாசி 100 பந்துகளில் 16 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 114 ஓட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி 210 ஓட்டங்களை பெற்றபோது, முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. தவானின் வெளியேற்றத்தையடுத்து அம்பத்தி ராயுடு ஆடுகளம் நுழைந்தார்.

மறுமுனையில் போட்டியில் ஆரம்பத்திலிருந்து தவானுக்கு பக்கபலமாக இருந்து ஆடிவந்த அணித் தலைவர் ரோஹித் சர்மா 106 பந்துகளை எதிர்கொண்டு 35.2 ஆவது ஓவரில் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இறுதியாக இந்திய அணி 39.3 ஓவரில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 238 என்ற வெற்றியிலக்கினை கடந்து, 9 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றயீட்டியது.

ரோஹித் சர்மா 119 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஒட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலா 111 ஓட்டத்துடனம் ரயுடு 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அத்துடன் இந்திய அணி சுப்பர் 4 சுற்றில் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலிபானின் ஆட்சியின் கீழ் மகளிர் உரிமை...

2024-03-19 16:54:41
news-image

தென் ஆபிரிக்காவுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட்...

2024-03-19 15:26:44
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேலி...

2024-03-19 12:05:57
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44