நியுயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

Published By: Vishnu

23 Sep, 2018 | 10:21 PM
image

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இரவு நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நியுயோர்க் நகரில் ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலில் அமைச்சர் திலக் மாரப்பன, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை வரவேற்றனர்.

“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல், அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். 

ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு நாளை இடம்பெறுகின்றது. இம் மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தொடரொன்றும் அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நிதியம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வும் ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:17:56
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01