பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?; இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 238

Published By: Vishnu

23 Sep, 2018 | 11:08 PM
image

இந்திய அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் மலிக்கின் பொறுப்பான ஆட்டத்தின் துணையுடன் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 237 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்  முதலில் களமிறங்குவதற்கு தீர்மானித்தார். அதன்கிணங்க பாகிஸ்தான் அணியின் இமாம் உல்ஹாக் மற்றும் பகர் ஜமான் ஆகியோர் களமிறங்கி ஆடிவர பாகிஸதான் அணி 24 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்படி 7 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் இமாம் 10 ஓட்டத்துடன் சாஹலின் பந்து வீச்சிழ் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேற பாபர் அசாம் ஆடுகளம் புகுந்தார்.

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவர பாகிஸ்தான் அணி 10 ஓவருக்கு இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து 28 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. ஆடுகளத்தில் பகர் ஜமான் 12 ஓட்டத்துடனும் அசாம் 1 ஓட்டத்துடனும் ஆடி வந்தனர். 

எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 55 ஆக இருக்கையில் பாகிஸ்தான் அணியின் இரண்டாவது விக்கெட்டும் தகர்க்கப்பட்டது. அதற்கிணங்க 31 ஒட்டங்கள‍ை பெற்றுக்கொண்ட பகர் ஜமான் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேற அசாம் 9 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 15 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து மலிக்  மற்றும் அணித் தலைவர் சப்ராஸ் அகமட் களமிறங்கி ஜோடி சேர்ந்தாடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவான நிலைக்கு சென்றது.

27.1 ஆவது ஓவரில் அணி 100 ஓட்டங்களை தொட இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டாடி வந்த மலிக் 34.5 ஆவது ஓவரில் அரைசதம் கடக்க, தொடர்ந்து சப்ரஸ், மலிக்கின் இணைப்பாட்டம் 100 ஓட்டங்களை தாண்டியது.

எனினும் பாகிஸ்தான் அணி 38.5 ஆவது ஓவரில் 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டபோது தனது நான்காவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது. அதன்படி சப்ரஸ் 44 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் ரோஹித் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து அஸீப் அலி களம் நுழைந்து ஆடி வர பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டத்தை பெற்றது. 42 ஆவது ஓவருக்காக புவனேஸ்வர் குமார் பந்துப் பறிமாற்றம் மேற்கொள்ள அசீஸ் அந்த ஓவரை துவம்சம் செய்தார் அதன்படி 1 ஆறு ஒட்டம், 1 நான்கு ஓட்டம், மீண்டும் 1 ஆறு ஓட்டத்தை அடுத்தடுத்து விளாசி தள்ளினார். 

43.1 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, போட்டியில் சிறப்பாக ஆடிவந்த மலிக் 78 ஓட்டத்துடன் பும்ராவின் பந்து வீச்சில் தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற அதிரடி காட்டி வந்த அசீஸும் 21 பந்துகளை எதிர்கொண்டு 30 ஓட்டத்துடன் சஹலுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறதியாக பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டத்தை பெற்றுக்கொண்டது. 

ஆடுகளத்தில் மொஹம் நவாஸ் 15 ஓட்டத்துடனும் ஹசன் அலி 2 ஓடத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 238 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் சஹால், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35