(இரோஷா வேலு) 

உடப்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் கட்டட கூரை மீதேறிய மாணவன், கூரை உடைந்து வீழ்ந்ததில் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை, 6 ஆம் வட்டாரம் உடப்பைச் சேர்ந்த 13 வயதுடைய திவாகரன் என்ற மாணவன் புறா பிடிப்பதற்காக கூரை மீது ஏறியுள்ளான். இதன்போது கூரை உடைந்து விழுந்ததில் மாணவன் கீழே விழுந்து காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த மாணவனின் சடலத்துக்கான பிரேத பரிசோதனைகள் வைத்தியாசாலையில் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.