இயற்கைப் பூங்கா அமைக்க எம்மிடம் அனுமதி கோரவில்லை ; நீர்பாசனத்  திணைக்களம்

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 02:39 PM
image

கிளிநொச்சி இயற்கைப் பூங்காவை அமைப்பதற்கு நீர்பாசனத் திணைகளத்திடம் அனுமதி கோரவோ வழங்கவோ இல்லை என குறித்த  நீர்பாசனத்  திணைகளத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி குளத்திற்கு முன்பக்கமாக மருதநகர் பகுதியில் (நீர்பாசனத் திணைகளத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் )   வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட ரூபா 3287299.00 ரூபா செலவில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் கரைச்சி பிரதேச சபையின் மேற்ப்பார்வையில் அமைக்கப்பட்ட இயற்கைப் பூங்காவிற்கு   நீர்பாசனத்  திணைகளத்திடம் அனுமதிக்கோரிப் பெறப்படவில்லை என கிளிநொச்சி நீர்ப்பாசனப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தவருடம் .08 ஆம் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் மாதம் 15 ஆம் திகதி வரை ஒப்பந்தகாலம் வழங்கப்பட்டு குறித்த வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளது.  

இது தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபை செயலாளரை தொடர்புகொண்டு வினவிய பொழுது குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரே இதற்கான அனுமதி கோரி அனுப்பப்பட்டதாகவும் இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

குறித்த இயற்கைப் பூங்காவிற்கு ஒப்பந்தத் தொகை முழுவதும் பயன்படுத்தப்படாது இதில் ஏதும் ஊழல் நடந்திருக்கலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் அத்துடன் கட்டப்பட்டுள்ள இயற்கைப் பூங்கா இன்றுவரை பாவனை இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10