எஸ். ரவிசான்

  கோதுமை மாவின் விலையினை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் ஒருகிலோ கோதுமை மாவின் விலையானது 7.20 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதோடு தற்போது அதன் புதிய விலையானது 97.50 ரூபாவாக காணப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான இறக்குமதி வரிகளில் ஏற்றப்பட்ட அதிகரிப்பே மேற்படி விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.