ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இணைப்புச் செயலாளராக பாலித பெல்பொல நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்தது.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக பதவி வகித்த பாலித பெல்பொல அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.