கணினி, கைபே­சி­க­ளுக்­கான தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கிய பிர­பல தமி­ழ­றிஞர் பச்­சை­யப்பன் சென்­னையில் நேற்றுக் காலை கால­மானார்.பழைய வண்­ணா­ரப்­பேட்­டையைச் சேர்ந்த இவர் தனது 85 வயதில் மரணமடைந்­துள்ளார்.ஓய்வு பெற்ற தலைமை ஆசி­ரியர் மற்றும் தமி­ழ­றிஞரான இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்­காகப்பாடு­பட்­ட­வ­ராவார்.

நாளி­தழ்­களில் சமஸ்­கி­ருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்­பி­யவர் பச்­சை­யப்பன்.

இவ­ரது குடும்பம் தொடர்­பான வழக்கு ஒன்றின் விசா­ர­ணைக்­காக சென்னை உயர் நீதி­மன்றம் வந்­துள்ளார். 

அப்­போது இவர் மயங்கி விழுந்துள்ளார். பின்­புதான் இவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டது தெரிய வந்­துள்­ளது.

சம்­பவ இடத்திலிருந்து பொலிஸார் உத­வி­யுடன் மருத்­து­வ மனைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே இவர் மரணம் அடைந்­து­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

கணினி, கைபேசி­களில் ஆதிக்கம் செலுத்தி வந்­த ஆங்­கி­லத்­துக்குப் பதி­லாக தமிழ் எழுத்­துக்­களை உரு­வாக்­கி­யவ இவர் இந்­திய சுதந்திரப் போராட்­டத்­திலும் கலந்து கொண்­டவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.