குருணாகல் மாவட்ட விவசாய சமூகத்திற்கு காணி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Published By: Daya

22 Sep, 2018 | 02:22 PM
image

பொதுமக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை நன்குணர்ந்த ஜனாதிபதி என்ற வகையில் தான் எப்போதும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் குருணாகல் மாவட்டத்தில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்ட அரச காணிகளில் குடியேறியுள்ள, காணிகளை அபிவிருத்தி செய்துள்ள விவசாய சமூகத்திற்கு 2000 காணி உறுதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. 

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

குருணாகல் மாவட்டத்தில் கல்கமுவை, ஆனமடுவை, கிரிபாவ, அம்பன்பொல, மஹவ, கல்கிரியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விவசாய சமூகத்திற்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்பட்டதுடன், மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 40 பேர்களுக்கான உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

பண்டுவஸ்நுவர மேற்கு சாசனாரக்ஷண சபையின் இரண்டாம் வலயத்தின் தலைவரும், பண்டுவஸ்நுவர பண்டுகாபய பிரிவெனாவின் தலைமை பிக்குவும் ஹொரகொல்ல மே தங்கர பௌத்த மத்திய நிலையம் மற்றும் திகல்கெதர ஷைல்யாராமய விகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய வஹன்துரே சித்தார்த்த தேரருக்கான உறுதியையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

அரச நிறுவனங்களுக்கு காணிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் வடமேல் மாகாண சுகாதார சேவை திணைக்களத்திற்குமான காணி உறுதிகளையும் ஜனாதிபதி  வழங்கி வைத்தார்.

அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பீ நாவின்ன, துமிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் கே.கே. லோகேஷ்வரன், முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, காணி, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யு.எஸ். கருணாரத்ன, மாவட்ட செயலாளர் காமினி இலங்கரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58