பிரான்சில் கோப்பை கழுவினேன், பிள்ளைகளை பராமரித்தேன்- மனம் திறந்தார் சந்திரிகா

Published By: Rajeeban

21 Sep, 2018 | 03:27 PM
image

வறுமையென்றால் என்னவென்பதை நான் அறிவதற்கான வாய்ப்பு பிரான்சில் கல்வி கற்றவேளையே எனக்கு கிடைத்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள உயர் கௌரவத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் பகுதி நேர வேலைகளை செய்தேன் ஆங்கிலம் கற்பித்தேன், குழந்தைகளை பராமரித்தேன், துப்புரவு வேலைகளை செய்தேன், பல்கலைகழக ஹோட்டல்களில் கோப்பை கழுவினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனது உரையில் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

நான் எனர் இரண்;டாவது தாயகம் என நான் கருதும் நாட்டிலிருந்து இந்த கௌரவம் கிடைத்துள்ளமை குறித்து நான் பெருமிதமடைகின்றேன்.

பிரான்சில் நான் பல்கலைகழக கல்வியை கற்பதற்கான புலமைப்பரிசிலை அந்த நாடு எனக்கு வழங்கியது.

பிரான்சின் இந்த தாராள மனப்பான்மை எனது ஆளுமையும் அறிவும் வளர்ச்சியடைவதற்கு காரணமாக அமைந்தது.

சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய  நிலையான விழுமியங்களை நான் அனுபவிப்பதற்கான வாய்ப்பை பிரான்சே வழங்கியது.

பன்முகத்தன்மையின் அழகையும் அவசியத்தையும் நான் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பிரான்ஸ் வழங்கியது.

எனது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட  அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மை என்ற விழுமியமும்,நான் நம்பிய கொள்கைகள் மீதான தளர்வற்ற பற்றும்- பாரிஸில் கல்விகற்றவேளை முழுமையாகின.

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டில் கல்விகற்கும் மாணவர்களிற்கு பணத்தை இலங்கையிலிருந்து அனுப்புவதற்கு அவ்வேளை தடை விதித்திருந்ததால் நான் பிரான்ஸ் எனக்கு பல்கலைகழக மாணவி என்ற அடிப்படையில் வழங்கிய பணத்தை வைத்தே கல்வி கற்றேன்

நான் ஏனைய மாணவர்களை போலவே வாழ்ந்தேன்,பல்கலைகழக உணவு விடுதியில் குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படும் உணவை உட்கொண்டேன்,பொது போக்குவரத்தை பயன்படுத்தினேன் பணத்தை சேமிப்பதற்காக  கலை நிகழ்ச்சிகளிற்கு செல்வதை தவிர்த்தேன்.

நான் பகுதி நேர வேலைகளை செய்தேன் ஆங்கிலம் கற்பித்தேன், குழந்தைகளை பராமரித்தேன், துப்புரவு வேலைகளை செய்தேன், பல்கலைகழக ஹோட்டல்களில் கோப்பை கழுவினேன்.

இதன் காரணமாக நான் ஏழ்மையென்றால் என்னவென்பதை அறிந்தேன். இலங்கையில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திராது.

இது தீவிரவாதத்தை நோக்கிய எனது ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.சிறுவயதிலிருந்தே எனக்குள் தீவிரவாத சிந்தனைகள் மையம்கொண்டிருந்தன.

68 மே சம்பவங்களின் போது நான் வீதியில் நின்றேன்,ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தேன்,தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான  ஏற்பாடுகளை செய்தேன் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டேன்.

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்திலிருந்து பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி என்னை சந்திக்க விரும்புகின்றார் என தகவல் கிடைத்தது.

நான் அந்த அதிகாரியை சந்தித்தேன், நான் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் அடுத்த பிளேனில் இலங்கை செல்லவேண்டியிருக்கும் என எச்சரித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51